மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம் + "||" + Accident near Trivandrum: Freight auto collision on electric pole; Husband, wife injured

திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்

திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்
திருத்தணி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லாபுரி (வயது 48). இவரது மனைவி ஷோபா (37). இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நேற்று காலை தங்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேல் திருத்தணி மாதா கோவில் அருகில் வந்த போது, சரக்கு ஆட்டோ நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொல்லாபுரி மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

கணவன், மனைவி காயம்

தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று சரக்கு ஆட்டோவில் சிக்கிய கணவன், மனைவியை காப்பாற்றி சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதிய விபத்தில் அந்த மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்
கானத்தூர் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வங்கி பெண் அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
2. ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் மோதல்; மாகாண துணை கவர்னர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் கபீசா மாகாண துணை கவர்னர் தலீபான்களுடனான மோதலில் இன்று கொல்லப்பட்டு உள்ளார்.
3. நண்பர்களுக்கு மது விருந்து வைத்தபோது மோதல்: ரவுடிக்கு கத்தியால் சரமாரி வெட்டு; 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் யார் பெரியவர் என்பதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டிய அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. வேன்-மோட்டர் சைக்கிள் மோதல்
வேன்-மோட்டர் சைக்கிள் மோதல்-3 பேர் படுகாயம்
5. நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதல்
தமிழக-புதுச்சேரி மாநில எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.