மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு + "||" + Corona damage that went below 20,000 in the Maharashtra

மராட்டியத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் சென்று உள்ளது.
18,600 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. மாநிலத்தில் புதிதாக 18 ஆயிரத்து 600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் இதுவரை 57 லட்சத்து 31 ஆயிரத்து 815 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 53 லட்சத்து 62 ஆயிரத்து 370 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 71 ஆயிரத்து 801 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 402 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 94 ஆயிரத்து 844 பேர் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மும்பை பாதிப்பு
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 1,066 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 22 பேர் பலியானார்கள். இதுவரை நகரில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 575 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 414 நாட்களாக உள்ளது.தாராவியில் நேற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தை தொட்டது. அங்கு புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி 
செய்யப்பட்டது. தற்போது அங்கு 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17ந்தேதிக்கு பின் அதிக அளவாக கொரோனா பாதிப்புக்கு 131 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவியையும் அரசு செய்யும் என பேட்டி அளித்தார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.