மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம் + "||" + Preparations begin for construction of a new bridge over Kovilpatti Main Road

கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்
கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி மெயின் ரோட்டில் பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.

பணிகள் தொடங்கியது

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரெயில்வே மேம்பாலம் வரை நாற்கர சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முன்னதாக மெயின் ரோட்டில் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய பின்பு தான் ரோடு வேலையை தொடங்க வேண்டும் என்று பல சமூக ஆர்வ அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் கடந்த மாதம் அகற்றப் பட்டது. மெயின் ரோடு, மாதாங்கோவில் சந்திப்பு 6 மீட்டர் பாலத்தை அப்புறப்படுத்தி விட்டு 15 மீட்டர் அகலமுள்ள பாலம் அமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ மேற்பார்வையில் பழைய பாலத்தை ராட்சச எந்திரத்தை வைத்து இடிக்கும் பணி தொடங்கியது.

45 நாட்களுக்குள்....

இந்த பாலம் அமைக்கும் பணி 45 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும், இந்த பாலம் கட்டி முடிக்கப் பட்டவுடன், எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஓடைப் பாலம் ரூ.75 லட்சம் செலவில் 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் கட்டுமான பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.