மாவட்ட செய்திகள்

குடியாத்தத்தில் கொரோனாவுக்கு கணவன்- மனைவி பலி + "||" + Husband-wife killed for Corona

குடியாத்தத்தில் கொரோனாவுக்கு கணவன்- மனைவி பலி

குடியாத்தத்தில் கொரோனாவுக்கு கணவன்- மனைவி பலி
குடியாத்தத்தில் கொரோனாவுக்கு கணவன்- மனைவி பலி
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம், ஜி.பி.எம். தெருவைச் சேர்ந்தவர் ஆர்.பி.நாகராஜன் (வயது 73). இவரது மனைவி ராஜேஸ்வரி (68). நாகராஜன் நகைக் கடை வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ராஜேஸ்வரி கடந்த 28-ந் தேதி பரிதாபமாக இறந்தார். சிகிச்சையில் இருந்த கணவர் நாகராஜனும் நேற்று காலை உயிரிழந்தார். கொரோனோ தொற்றால் கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.