மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் + "||" + Seizure of vehicles of those who violated the curfew

கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்

கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு,

கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியிடங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி கிணத்துக்கடவு பகுதியில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், ஆர்.எஸ்.ரோடு, கோவில்பாளையம், தாமரைக்குளம், வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி இ-பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனை மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே வருகின்றனர். முழு ஊரடங்கில் வெளியே வந்ததாக கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். 

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம். நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.