மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வு + "||" + The interview for the post of Doctor was held at Nellai Government Medical College.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வு

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வு
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல டாக்டர்கள், செவிலியர்களும் தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதையொட்டி பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதற்காக புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கான நேர்முகத்தேர்வு நேற்று மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை முடித்த 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வந்திருந்தனர். அவர்களது சான்றிதழ்களை அலுவலர்கள் சரிபார்த்தனர். பின்னர் ஒவ்வொருவருடைய திறமைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களது பட்டியல் சேகரிக்கப்பட்டு விரைவில் தேவையான டாக்டர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.