மாவட்ட செய்திகள்

வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது + "||" + Police have arrested a teenager for brewing liquor at his home near Kadayanallur.

வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
கடையநல்லூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக கடையநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் குக்கர் மூலம் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

இதுதொடர்பாக மேல கடையநல்லூர் வேத கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் சந்திரனை (வயது 36) போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கனி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாராயம் காய்ச்சியவர் கைது
சாராயம் காய்ச்சியவர் கைது
2. சாராயம் காய்ச்சியவர் கைது
சாராயம் காய்ச்சியவர் கைது
3. சாராயம் காய்ச்சியவர் கைது
சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்