மாவட்ட செய்திகள்

நர்சிடம் 6 பவுன் நகை பறிப்பு + "||" + rabory

நர்சிடம் 6 பவுன் நகை பறிப்பு

நர்சிடம் 6 பவுன் நகை பறிப்பு
நர்சிடம் 6 பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, ஜூன்.1-
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியபிரியா (வயது 35). மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு இரவு பணிக்காக வீட்டில் இருந்து மொட்டில் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் சத்தியபிரியா வைகை ஆற்றின் புதுபாலத்தில் சென்ற போது, பின்தொடர்ந்து வந்தவர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சத்தியபிரியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.