மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரத்தில் மூதாட்டி சாவு + "||" + The old woman, who was lying with injuries in Pavoor Chattra, died at the hospital without any treatment.

பாவூர்சத்திரத்தில் மூதாட்டி சாவு

பாவூர்சத்திரத்தில் மூதாட்டி சாவு
பாவூர்சத்திரத்தில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்திலிருந்து செட்டியூர் செல்லும் சாலையில் கடந்த மாதம் 5-ந்தேதி காலையில் மூதாட்டி ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்? அவர் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.