மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் அனுமதி + "||" + At Salem Government Hospital allowed Veerappan's brother

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் அனுமதி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் அனுமதி
நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 87). இவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.