மாவட்ட செய்திகள்

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை + "||" + For hairdressing workers Request for relief of Rs. 10 thousand

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு
 ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ஜெயங்கொண்டம், ஜூன்.2-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளனர். இவரது ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவுப்படி கடந்த 50 நாட்களாக முடிதிருத்தும் (சலூன்) கடைகள் பூட்டியே கிடக்கின்றன. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகளும், ஜெயங்கொண்டத்தில் 300-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கடை வாடகை, வீட்டு வாடகை, மின் கட்டணம், குடும்ப செலவிற்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதேபோல் தற்போதும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிலை வைக்க தடை; ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாததால் வடமாநில தொழிலாளர்கள் கவலை
கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சிலை வைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உற்பத்தி செய்த விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாததால் வடமாநில தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
2. புகளூர் காகித ஆலை தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்
புகளூர் காகித ஆலை தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
3. திருவொற்றியூரில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
4. ஊரடங்கால் வேலையிழந்து சத்தியில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5. உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு
உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்ககள் பரிதாபமாக இறந்தனர்.