மாவட்ட செய்திகள்

தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை + "||" + Request

தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தமிழகம் முழுவதும் இடைத்தரகர்கள் இன்றி தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேவகோட்டை,

தமிழகம் முழுவதும் இடைத்தரகர்கள் இன்றி தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நஷ்டம்

இது தொடர்பாக தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
 காய்கறிகளை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளிடம் பொது மார்க்கெட்டில் மிக குறைவான விலைக்கு வாங்கி 4 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதில் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகிறார்கள். பொதுமக்களும் அதிக விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாரபட்சமில்லாமல் ஒரு நிர்ணய விலையை வைத்து தமிழக அரசு கொள்முதல் நிலையங்களை ஆரம்பிக்கவேண்டும்.
 தற்போதைய நிலையில் விவசாயிகளின் உற்பத்தி செலவு பல மடங்காக உயர்ந்து விட்டது. விளைவித்த பொருளுக்கு சரியான விலை இல்லாத காரணத்தினால்தான் காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தாலுகா வாரியாக...

தமிழக அரசு ஒவ்வொரு தாலுகா வாரியாக கொள்முதல் நிலையங்களை அமைத்தால் விவசாயிகளும் அங்கு சென்று அந்த கொள்முதல் நிலையத்தில் உற்பத்தி செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமலும், கமிஷன் அடிப்படையில்லாத முறையிலும், நியாயமான விலை விற்க முடியும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி அரசு காய்கறி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். தாலுகா வாரியாக கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அரசுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் உள்ளன. வாடகை கட்டிடம் தேவை இல்லை.பொது மக்களுக்கும் எந்த சிரமமும் இல்லாமல் காய்கறிகளை அங்கன்வாடி மையத்திலும் ரேஷன் கடைகளுக்கு அருகிலும் நகர்புற மகளிரை கொண்டு விற்பனை செய்வதற்கு முயற்சி எடுத்தால் பலருக்கு மறைமுக வேலையும் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கீரமங்கலம் பகுதியில் மழை, காற்றில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின்உயர் கல்வி கனவு நனவாகுமா?
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர் கல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை
சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
4. துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
5. பனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை
பனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.