மாவட்ட செய்திகள்

டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடியகார் மோதி தொழிலாளி பலி + "||" + death

டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடியகார் மோதி தொழிலாளி பலி

டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடியகார் மோதி தொழிலாளி பலி
ராஜபாளையம் அருகே டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடிய கார் மோதி தொழிலாளி பலியானார்.
தளவாய்புரம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். 
அப்போது பின்னால் வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் நடந்து சென்ற சுந்தரம் மீது வேகமாக மோதியது. இதில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
 இதுபற்றி சேத்தூர் போலீசார் விசாரணை செய்ததில் சென்னை சூலக்கரை பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவர் ஓட்டி வந்த கார் என்பதும், தென்காசி ஆய்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
2. லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.
3. கார் மோதி தொழிலாளி பலி
சிவகாசி அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
4. விஷம் குடித்தவர் சாவு
விஷம் குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
5. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு