மாவட்ட செய்திகள்

வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் + "||" + Agriculture Edit Legal Copy Burning Struggle

வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்

வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்
சிவகங்கை, திருப்புவனத்தில் வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
திருப்புவனம்
சிவகங்கை, திருப்புவனத்தில் வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
போராட்டம் 
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். 
போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சந்திரன், முத்துப்பாண்டி, சகாயம், கங்கைசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் திருப்புவனம் வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. பூவந்தியில் கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், ஏனாதியில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமையிலும், செங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா தலைமையிலும், மாரநாட்டில் கணேசன் தலைமையிலும், பிச்சைப்பிள்ளையேந்தலில் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையிலும், இலந்தைகுளத்தில் சின்னக்கருப்பன் தலைமையிலும், மடப்புரத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவி தலைமையிலும் சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றது. 
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கலை, அறிவியல் கல்லூரியில் 2-வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கலை, அறிவியல் கல்லூரியில் 2-வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
அருப்புக்கோட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
4. தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மனித சங்கிலி போராட்டம்
மனித சங்கிலி போராட்டம்