மாவட்ட செய்திகள்

புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம் + "||" + Gandhi statue

புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம்

புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம்
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் புதிதாக நிறுவப்பட்ட காந்தி சிலையின் பெயர் பலகை மாயம் ஆனது
கரூர்
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்திசிலை ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காந்தி சிலை அகற்றப்பட்டு அதே இடத்தில் 7 அரை அடி உயரமுள்ள வெண்கல சிலை ஒன்று புதிதாக அதே இடத்தில் நிறுவப்பட்டது. அந்த சிலையை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த சிலையின் கீழ்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை திடீரென மாயமாகி உள்ளது. பெயர் பலகை பெயர்ந்து விழுந்ததா? அல்லது மர்மநபர்கள் பெயர்த்து சென்றனரா? இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.