மாவட்ட செய்திகள்

நுங்கு வெட்டியபோது பரிதாபம் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பலி + "||" + The college professor who fell from the awful palm tree when Nungu was cut down was killed

நுங்கு வெட்டியபோது பரிதாபம் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பலி

நுங்கு வெட்டியபோது பரிதாபம் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பலி
பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியபோது, கீழே தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 34). இவர், ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர், பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

உயிரிழந்தார்

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி பேராசிரியர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான லோகநாதனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மீது போலீஸ் வேன் மோதி கணவன்- மனைவி பலி
போலீஸ் வேன், கார் மீது மோதியதில் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற கணவன்- மனைவி பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
2. விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.
3. கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.
4. விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
5. காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.