மாவட்ட செய்திகள்

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் + "||" + Corona Vaccination Special Camp at Poondi Panchayat next to Tiruvallur

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தி.மு.க. பூண்டி ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி என்கின்ற அன்பரசு தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றியக் குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் அங்கிருந்த கொரோனா வைரஸ் தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை வழங்கினார்

அப்போது பூண்டி ஊராட்சி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் யஸ்வந்த் (வயது 12) என்ற சிறுவன் புதிய சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரனிடம் கொரோனா நிதியாக வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
2. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கிணத்துக்கடவு, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
3. காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
4. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
5. திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது.