மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Penalty

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது ஆலோசனையின் பேரில் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி போடும் முகாம், நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, துப்புரவு பணி போன்ற பணிகள் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மளிகை கடை, காய்கறி கடை, ஓட்டல்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா? என்பதனை ஆய்வு செய்து, முக கவசம் அணியாதவர்கள் 11 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் வெளியூரில் இருந்து நகருக்குள் வந்த 73 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம்
திருத்தங்கல் பகுதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்
திருச்சி மாநகரில் முககவசம் அணியாத, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
மோட்டார் சைக்கிளில் சென்ற போது தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
5. கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்.