மாவட்ட செய்திகள்

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி + "||" + The bus collided with the DMK while walking. The celebrity kills

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சி சென்ற போது பஸ் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்,

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 51). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் நகர மன்ற உறுப்பினராவார். தற்போது காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட வரத்தக அணி துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று இவர் தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சீபுரம் டி.கே. நம்பி தெரு வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்த்திபனை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பார்த்திபனுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்திபனின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி
கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி.
2. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி
தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதிய ஷேர்ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை, பாதிரியார் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
3. ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பஸ் மோதி காவலாளி பலி
பஸ் மோதி காவலாளி பலியானார்.
5. பா.ஜனதா பிரமுகர் படுகொலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெறிச்செயல்
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.