மாவட்ட செய்திகள்

ஆறுமுகநேரியில் கள் விற்றவர் கைது + "||" + palm drink seller arrested in arumuganeri

ஆறுமுகநேரியில் கள் விற்றவர் கைது

ஆறுமுகநேரியில் கள் விற்றவர் கைது
ஆறுமுகநேரியில் கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
 ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சீனந்தோப்பு விலக்குப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பனங்காடு பகுதியில் கள் விற்றுக் கொண்டிருந்தவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர் ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் கருப்பசாமி (வயது 55) என்பதும், அவர் அனுமதியின்றி கள் விற்பனை செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்த 10 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கருப்பசாமியை கைது செய்தனர்.