மாவட்ட செய்திகள்

பேக்கரியை சேதப்படுத்திய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது + "||" + Damaged the bakery 2 more people were arrested in the incident

பேக்கரியை சேதப்படுத்திய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

பேக்கரியை சேதப்படுத்திய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது
பேக்கரியை சேதப்படுத்திய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி, ஜூன்.
வாடிப்பட்டி சந்தைப்பாலம் அருகில் சோனை என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. இங்கு கடந்த 5-ந்தேதி மாலை கத்தி, கம்புடன் வந்த சிலர் பேக்கரியின் கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக பொட்டுலுப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது 28), கரட்டுப்பட்டியை சேர்ந்த அறிவுசெல்வம் (19), சோழவந்தானை சேர்ந்த பெரியமருது (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தப்பி ஓடிய பொட்டுலுப்பட்டியை சேர்ந்த சுபாஸ், கீழநாச்சிகுளத்தை சேர்ந்த பட்லி என்ற சூரியபிரகாஷ், சாலட்சிபுரத்தை சேர்ந்த பூஜை என்ற கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். மேலும் விசாரணையில், பேக்கரியில் வேலை செய்த விஸ்வநாதன் என்பவருக்கும், கைது செய்யப்பட்ட அசோக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் விஸ்வநாதனை தேடி வந்த கும்பல் அவர் இல்லாததால் பேக்கரியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் பட்லி என்ற சூரியபிரகாசையும், பூஜை என்ற கார்த்திக்கையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுபாசை தேடி வருகின்றனர்.