மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது + "||" + in kovilpatti, 2 youths arrested for selling cananbis

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜாதலைமையில் போலீசார் தாமஸ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாமஸ் நகர் மயானம் அருகே கஞ்சா விற்ற சுபாஷ் (வயது 20) மற்றும்  18 வயது மதிக்கத்தக்க மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.