மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர் பலி + "||" + College student death in accident

கல்லூரி மாணவர் பலி

கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் காட்டுராஜா. அவருடைய மகன் சூர்யா (வயது 22). இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

 நேற்று இவர், திண்டுக்கல்-நத்தம் சாலையில் கோபால்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ராதாராஜ் நகர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வடகாட்டுப்பட்டியை சேர்ந்த ராமராஜ் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சூர்யாவின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. 

 இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
பழனி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.
2. ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
4. சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்