மாவட்ட செய்திகள்

ஓசூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 190 பேர் மீது வழக்கு + "||" + first information report

ஓசூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 190 பேர் மீது வழக்கு

ஓசூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 190 பேர் மீது வழக்கு
ஓசூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 190 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓசூர்,

ஓசூர் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டு கட்சியினர், இளைஞர் பெருமன்றத்தினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஓசூர் டவுன் போலீசார் 12 பெண்கள் உள்பட 102 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஓசூர் சிப்காட் போலீசார் 30 பேர் மீதும், மத்திகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேர் மீதும், பாகலூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூர் பகுதியில் மொத்தம் 190 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.