மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது + "||" + school girl marage

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அதிகாரி பிரியாதேவி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு கடந்த மாதம் 17-ந் தேதி கனகராஜ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமணம் செய்த கனகராஜ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.