மாவட்ட செய்திகள்

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை ஓட்டலில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேர் கைது + "||" + Mumbai Ahmedabad Highway Whore in the cafe 3 people including the woman were arrested

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை ஓட்டலில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேர் கைது

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை ஓட்டலில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை ஓட்டலில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
வசாய், 

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை சாசுபாடா கிராமம் அருகே உள்ள ஓட்டலில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலில் விபசாரம் நடப்பதை உறுதிசெய்ய போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பினர். ஓட்டலில் இருந்த பெண் ஒருவர் விபசாரத்திற்காக 2 அழகிகளை அழைத்து வருமாறு ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதன்படி அந்த ஆட்டோ டிரைவர் 2 பெண்களை அந்த ஓட்டலுக்கு அழைத்து வந்தார். இதுகுறித்து உளவு பார்த்த வாடிக்கையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர். மேலும் ஓட்டலில் விபசார தொழில் நடத்திய பெண், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.