மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடிகள் சிக்கினர் + "||" + Famous rowdies got caught

பிரபல ரவுடிகள் சிக்கினர்

பிரபல ரவுடிகள் சிக்கினர்
போதை மாத்திரை, ஆயுதங்களுடன் பதுங்கிய பிரபல ரவுடிகள் சிக்கினர்
மதுரை,ஜூன்.
மதுரை செல்லூர் போலீசார் ரோந்து சென்றபோது செல்லூர் கண்மாய்க்குள் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் செல்லூர் அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 22), கீழத்தோப்பு சஞ்சீவிகுமார் (22), மீனாம்பிகைபுரம் தீனதயாளன் (20), அஜித் (20) என்பதும், பிரபல ரவுடிகளான அவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அங்கு பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் 120 போதை மாத்திரைகள், கஞ்சா, கத்தி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.