மாவட்ட செய்திகள்

காருடன் மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + Seizure of liquor bottles with car

காருடன் மதுபாட்டில்கள் பறிமுதல்

காருடன் மதுபாட்டில்கள் பறிமுதல்
காருடன் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேரையூர்,ஜூன்
பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் பேரையூர்-வத்திராயிருப்பு சாலையில் உள்ள லட்சுமிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு பகுதியில் இருந்து கார் ஒன்று வந்தது. போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 46 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சந்தையூரை சேர்ந்த மதன்குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.