மாவட்ட செய்திகள்

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதியில்டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனை; 7 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்துஅதிகாரிகள் நடவடிக்கை + "||" + Suspension of pharmacy license

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதியில்டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனை; 7 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்துஅதிகாரிகள் நடவடிக்கை

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதியில்டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனை; 7 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்துஅதிகாரிகள்  நடவடிக்கை
விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை, மருந்துகளை விற்பனை செய்த 7 மருந்துக்கடைகளின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
விருத்தாசலம், 

ஆய்வு

காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்று டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதால் கொரோனா தொற்று பாதிப்பு தெரியாமலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல்களில்(மருந்து கடைகள்) டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

உரிமம் ரத்து

அந்த வகையில் விருத்தாசலம் சரக மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டாக்டரின்  பரிந்துரை சீட்டு இல்லாமல், 4 மருந்து கடைகளில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மருந்து கடைகளின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.

கடும் நடவடிக்கை

இதுபற்றி விருத்தாச்சலம் சரக மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் கூறுகையில்,  விருத்தாசலம் சரகத்தில் உள்ள மருந்து கடைகளில் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், பசியின்மை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் பொதுமக்களிடம், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் ரசீது இல்லாமலும் மருந்து விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
இதேபோல் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், டி.நெடுஞ்சேரி ஆகிய பகுதிகளில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த 3 மருந்து கடைகளின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.