மாவட்ட செய்திகள்

கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja at Kotagiri Mariamman Temple

கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி நேற்று அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பூசாரி மட்டும் கோவில் நடையை திறந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளை நடத்தினார். பூஜைகள் நிறைவுபெற்ற பிறகு கோவில் நடை மீண்டும் அடைக்கப்பட்டது.