மாவட்ட செய்திகள்

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, கலெக்டர் தொடங்கிவைத்தார் + "||" + Sapling planting program at Shrub Cultivation Project

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, கலெக்டர் தொடங்கிவைத்தார்

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில்  மரக்கன்று நடும் நிகழ்ச்சி, கலெக்டர் தொடங்கிவைத்தார்
குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, கலெக்டர் தொடங்கிவைத்தார்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மியாவாக்கி குறுங்காடு வளர்ப்பு திட்டம் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ‌.எஸ். அப்துல்கலில், எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினர். கலெக்டர் சிவன்அருள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

 நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.