மாவட்ட செய்திகள்

அரசு நிலத்தை கையகப்படுத்த முயன்றவர் மீது போலீசில் புகார் பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல் + "||" + Complain to the police against the person who tried to take over the government land

அரசு நிலத்தை கையகப்படுத்த முயன்றவர் மீது போலீசில் புகார் பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்

அரசு நிலத்தை கையகப்படுத்த முயன்றவர் மீது போலீசில் புகார் பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்
அரசு நிலத்தை கையகப்படுத்த முயன்றவர் மீது போலீசில் புகார் பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்
ஆற்காடு

ஆற்காடு வட்டத்தில் அரசு நிலங்களை கையகப்படுத்தி உரிமை கொண்டாடும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திமிரியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் அரசு மலைப் புறம்போக்கு தரிசு நிலத்தை பரமசிவம் என்பவர் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியின் மூலம் சமன்படுத்தி கையகப்படுத்த முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாசில்தார் காமாட்சி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அரசு மலைப் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த முயன்ற பரமசிவம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமிரி போலீசில் தாசில்தார் காமாட்சி புகார் செய்தார். மேலும் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை அவர் பறிமுதல் செய்து, திமிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.