மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி + "||" + North Indian youth falls into water tank and dies

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
பேரூர்

வடமாநிலத்தை சேர்ந்தவர் சச்சின் ரபா (வயது 32). இவர் ஆலாந்துறை அருகே உள்ள காருண்யா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியின் அருகே சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீரென்று அங்கு இருந்த 12 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.  அதில் 10 அடிக்கு தண்ணீர் இருந்ததால் நீச்சல் தெரியாமல் அவர் தத்தளித்ததுடன், அலறினார். 

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சச்சின் ரபா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.