மாவட்ட செய்திகள்

கிராவல் மண் கடத்த முயன்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for trying to smuggle gravel

கிராவல் மண் கடத்த முயன்ற 2 பேர் கைது

கிராவல் மண் கடத்த முயன்ற 2 பேர் கைது
கிராவல் மண் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
ஆவூர்
குளத்தூர் தாலுகா, மாத்தூர் விவேகானந்தர் நகர் பின்புறம் காட்டாறு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இப்பகுதியில் சிலர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் மற்றும் கிராவல் மண் அள்ளி கடத்தப்படுவதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் சென்றன. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் சிலர் கிராவல் மண் அள்ளி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கிராவல் மணல் அள்ளி கடத்த முயன்ற  விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன் (வயது 40), திருச்சி மாவட்டம் லால்குடியை சோ்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் சதீஷ்குமார் (30) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.