மாவட்ட செய்திகள்

தென்காசி, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + STBI in Sankarankoil, Tenkasi Demonstration by parties

தென்காசி, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசி, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவான் ஒலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர தலைவர் செய்யது மஹ்மூத் நன்றி கூறினார். மேலும் தென்காசி மவுண்ட்ரோடு, கொடிமரம், பொன்னிப்பாறை இறக்கம் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்- சுரண்டை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் பள்ளமடை சேக் தலைமை தாங்கினார். இதேபோல் ஆட்டோ ஸ்டான்ட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணை செயலாளர் பீர் மைதீன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை அருகே வீராணம் ஜூம்மா பள்ளிவாசல் முன்பு நகர செயலாளர் காதர் மைதீன் என்ற சேட் தலைமையிலும், முத்துப்பேட்டை தெரு ரைஸ்மில் அருகில் நகர தலைவர் புகாரி தலைமையிலும், முத்துப்பேட்டை திடல் மெயின் ரோடு அருகில் பள்ளிவாசல் கிளை தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக ஊடக அணித்தலைவர் பாப்புலர் ஹக்கீம் கலந்து கொண்டார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.