மாவட்ட செய்திகள்

சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது + "||" + The man who was in hiding after pouring alcohol was arrested

சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது

சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது
சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற கட்ட பாலகிருஷ்ணன்(வயது 40). இவர் இலையூர் மேல வெளிப்பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்திற்கு அருகே உள்ள ஒரு ஓடையில் 100 லிட்டர் அளவு கொண்ட பேரலில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ஓடையில் பேரல் மூழ்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை தோண்டி எடுத்து பார்த்தபோது அதில் சாராய ஊறல் இருந்தது. பின்னர் சாராய ஊறல் முழுவதுமாக கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் தலைமறைவான பாலகிருஷ்ணனை, கடந்த 10 நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஊரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவர் தப்பி ஓட முயன்றார். அப்போது போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது
விருதுநகர் அருகே புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. பட்டாசுகளை பதுக்கியவர் கைது
சிவகாசியில் பட்டாசுகளை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
3. வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது
ராஜபாளையத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. சிறுமியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது
சிறுமியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. புகையிலை விற்றவர் கைது
புகையிலை விற்றவர் கைது