மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + To get married Sexual harassment of a student In the Pocso Act Youth arrested

திருமணம் செய்வதாக மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருமணம் செய்வதாக மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வி.கே.என் கண்டிகை காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). இவர் அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவின் பேரில் வெங்கடேசனை போலீசார் திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.