மாவட்ட செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் + "||" + The siege struggle

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
விருதுநகரில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
விருதுநகர், 
தமிழக அரசு பத்திர பதிவு அலுவலகம் கொரோனா வழிகாட்டலுடன் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அலுவலக செயல்பாட்டிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆவண எழுத்தர், முத்திரைத்தாள் விற்பனையாளர் மற்றும் ஜெராக்ஸ் நகல் எடுப்பவர்களது அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கவில்லை. இதனால் பத்திரப்பதிவுஅலுவலக செயல்பாடு முழுமையாக நடைபெறாத நிலை உள்ளது. விருதுநகரில் இந்த அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் இதுகுறித்து மனு கொடுத்து தங்கள் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்குமாறு கோரினர். ஆனாலும் உரிய அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பதிவு செய்துள்ள ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் பட்டியலை பெற்று இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தை தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. டேங்கர் லாரி கிளீனர் திடீர் சாவு:2 நாட்களாக நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது
டேங்கர் லாரி கிளீனர் திடீரென மரணம் அடைந்ததால் அதிருப்தி அடைந்த டிரைவர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
2. வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கிராம சுகாதார செவிலியர்கள் முற்றுகை
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குலசேகரன்பட்டினத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.