மாவட்ட செய்திகள்

ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி + "||" + Work to issue house to house tokens in Koothanallur area for Rs. 2,000, 14 types of groceries

ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி

ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி
ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.
கூத்தாநல்லூர்,

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தடு்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையில் ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது.


கடந்த 3-ந்தேதி 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

டோக்கன் வழங்கும் பணி

இதனையொட்டி கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ேரஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும்போது அவசியம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் எடுத்து கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கே பணி: அனைத்து போட்டி தேர்விலும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம்
அரசு துறைகளில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சியை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
2. தடுப்பூசி போடாத ஊழியர்கள் பணிக்கு வரக்கூடாது: டெல்லி அரசு
கொரோனா தடுப்பூசிகூட போடாத டெல்லி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற 16-ந் தேதி முதல் அவர்களது அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டெல்லி அரசு தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
3. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.
4. குன்னூரில் மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னூரில் மண்சரிவால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
5. சென்னையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுக்கும் பணி 10-ந்தேதி தொடங்குகிறது
சென்னையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுக்கும் பணி 10-ந்தேதி தொடங்குகிறது.