மாவட்ட செய்திகள்

திருமருகல் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது + "||" + 6 arrested for cutting sickle

திருமருகல் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது

திருமருகல் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது
திருமருகல் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் காலனி தெருவை சேர்ந்தவர் ரகுபதி மகன் பிரதாப் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும், மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ராஜேஷ்(29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரதாப் மருங்கூர் கடைத்தெருவில் தனியாக நின்று கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக ராஜேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அரிவாள் வெட்டு

பின்னர் இருவரும் தாக்கி கொண்டனர். அப்போது ராஜேசுடன் வந்திருந்த மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்த கதிரவன் மகன் ஆனந்தராமன்(21), தெற்கு தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமு(32), ரவி மகன் முத்துக்குமரன்(28), ரமேஷ் மகன் மணிகண்டன்(20), பக்கிரிசாமி மகன் கோபாலகிருஷ்ணன்(31) ஆகிய 6 பேரும் பிரதாப்பை தாக்கியுள்ளனர். அப்போது ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரதாப்பின் கையில் வெட்டியுள்ளார்.

இதில் காயம் அடைந்த அவரை. அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

6 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், ஆனந்தராமன், ராமு, முத்துக்குமரன், மணிகண்டன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தரமணியில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவர்
தரமணியில் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த முதியவர் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
2. பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது
பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
3. கள்ளக்காதலி வீட்டில் வக்கீல் வெட்டிக்கொலை தடுத்த காதலிக்கும் சரமாரி வெட்டு
கள்ளக்காதல் தகராறில் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுத்த கள்ளக்காதலிக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலியின் பெற்றோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.