மாவட்ட செய்திகள்

காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல் + "||" + Seizure of smuggled liquor in vaccines

காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்
காரில் கடத்திவரப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம், 

 கல்வராயன்மலை அடிவார பகுதியான கல்படை வனப்பகுதியில் இருந்து காரில் சாராயம் கடத்தி வரப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கல்படை பரிகம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது மோட்டார் சைக்கிள்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்  துரத்தி சென்று அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
 இதில் காரில், லாரி டியூப்களில் 210 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

சாராய ஊறல்

 விசாரணையில் அவர்கள்,  தாழ்மதூர் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் இளையராஜா (வயது 30), கல்படை கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகன் ராமர் (45), அண்ணாதுரை மகன் பார்த்திபன் (30) என்பது தெரிந்தது.
 இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ராமர் மு்ன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரும், அ.தி.மு.க.பிரமுகரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 12 லட்சம் வெள்ளி பொருட்கள் பணம் பறிமுதல்
சின்னசேலம் கள்ளக்குறிச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 12 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
2. மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்
தேவகோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
மூங்கில்துறைப்பட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்