மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு + "||" + Official inspection of restricted area

தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு

தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு
விக்கிரவாண்டியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் சிறுவள்ளிக்குப்பம், தொரவி, வெட்டுக்காடு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்க அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, தடை செய்யப்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களுக்கு குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கப்படுகிறதா? எனவும், கிராம தெருக்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா எனவும், பொதுமக்களுக்கு காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா எனவும், ஊராட்சிகளில் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கல்வராயன்மலை வாக்கு எண்ணும் மையத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
கல்வராயன்மலை வாக்கு எண்ணும் மையத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
2. முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ஆய்வு; கலெக்டரிடம் கனிமவள துறை அறிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீட்டின் பின்புறம் இருந்த 551 யூனிட் மணல் பற்றி ஆய்வு செய்த கனிமவள துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
3. கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தடுப்பூசி முகாம் பற்றி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
4. ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
5. போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களில் உரிய பாதுகாப்பு வசதி இருக்கிறதா? -போக்குவரத்துத்துறை சார்பில் ஆய்வு