மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது + "||" + Two arrested for inciting woman to commit suicide by hanging

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்,

கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமம் காந்திநகரை சேர்ந்த ராமசாமி மகள் தீபா (வயது 25). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபா, தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் இருவரும் தீபாவிடம் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் தீபாவை திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2 பேர் கைது

இதுகுறித்து தீபாவின் தாய் கலாவதி (50) கொடுத்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பாமா(25), பிரபுதாஸ் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத் தகராறில் விபரீதம் 3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை
வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. 'தற்கொலை தீர்வல்ல... தேர்வு, உயிரை விட பெரிதல்ல' - நடிகர் சூர்யா உருக்கம்!
தற்கொலை செய்து கொள்வது நெருக்கமானவர்களுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் தண்டனை - என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
4. அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மன அழுத்தத்தால் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-1 படித்து வந்த மாணவி, தனது வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.