மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு + "||" + The death toll for Corona has risen to 167

கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு

கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

53 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 10,486 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.  இவர்களில் 9,645 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 19 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 12 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 14 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 8 பேர் என மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3 பேர் பலி
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 674 பேரில் 433 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 241 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.
கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 9 பேருக்கு கொரோனா
புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
4. கொரோனாவுக்கு 2 பேர் பலி
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
5. கொரோனாவுக்கு 2 பேர் பலி
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.