மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா + "||" + Corona to 326 people in the last 24 hours in Pudhucherry

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 4,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 280 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 10 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,948 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,710 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மொத்தம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,905 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 4,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 3-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் - அரசு அதிகாரிகள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
4. புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
5. புதுச்சேரியில் புதிதாக 107 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 963 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.