மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளாக மிரட்டி 2 மகள்களை கற்பழித்த தொழிலாளி; ‘போக்சோ’ சட்டத்தில் கைது + "||" + man raped his two daughters

3 ஆண்டுகளாக மிரட்டி 2 மகள்களை கற்பழித்த தொழிலாளி; ‘போக்சோ’ சட்டத்தில் கைது

3 ஆண்டுகளாக மிரட்டி 2 மகள்களை கற்பழித்த தொழிலாளி; ‘போக்சோ’ சட்டத்தில் கைது
3 ஆண்டுகளாக மிரட்டி மகள்கள் 2 பேரை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு: 3 ஆண்டுகளாக மிரட்டி மகள்கள் 2 பேரை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

கூலி தொழிலாளி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் பசவப்பா (பெயா் மாற்றப்பட்டுள்ளது). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 16 மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று வந்தனா். 

இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது 2 மகள்களும் தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில், பசவப்பா வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து பெற்ற மகள்கள் என்று கூட பார்க்காமல் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

பலாத்காரம்

மேலும் பசவப்பா, மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது காம பார்வையை மகள்கள் மீது திருப்பி உள்ளார். அவர், தனது காம இச்சைகளை மகள்களிடம் தீர்த்து கொண்டார். அதாவது, பசவப்பா தனது மகள்கள் 2 பேரையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். 

இதனால் பயந்து போன அவர்கள் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பசவப்பா, பெற்ற மகள்களையே கடந்த 3 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

போக்சோ சட்டத்தில் கைது

பசவப்பாவின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால், அவருடைய 2 மகள்கள் இதுபற்றி தங்களது மாமாவிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவா், இதுகுறித்து சூரத்கல் போலீசில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பசவப்பாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகள்களை தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை