மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி + "||" + corona death

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
6 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 50 வயது பெண், 55 வயது ஆண், 67 வயது மூதாட்டி, 60 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதேபோல தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 42 வயது ஆண் செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.
185 பேர் பாதிப்பு
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 185 பேர் பாதிக்கப்பட்டனர். 301 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 38 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 36 ஆயிரத்து 219 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 1,710 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 6 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாயினர்.
2. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.
3. கொரோனாவுக்கு 6 பேர் பலி
கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர்
5. கொரோனாவுக்கு 6 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர