மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்போக்சோ சட்டத்தில் கைது + "||" + Kothanar, who fell in love with a Plus-2 student and got pregnant, was arrested by the polie under the Pokcho Act.

பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி பொன்மலையில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பொன்மலைப்பட்டி, 
திருச்சி பொன்மலையில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இதுபற்றி மாணவியிடம் விசாரித்தபோது, கொத்தனார் வேலை செய்துவரும் குண்டூர் அய்யனார் நகரை சேர்ந்த சிவா (வயது 20) மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் அத்தை கொடுத்த புகாரின் பேரில் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.