மாவட்ட செய்திகள்

விவசாயியிடம் பணம் பறிப்பு + "||" + money to the farmer

விவசாயியிடம் பணம் பறிப்பு

விவசாயியிடம் பணம் பறிப்பு
களக்காடு அருகே விவசாயியிடம் இருந்து பணம் பறித்து சென்ற 7 பேரை போலீசார் வலைவீச்சு தேடி வருகிறார்கள்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). விவசாயியான இவர் தனது மொபட்டில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து பத்மநேரிக்கு சென்று கொண்டிருந்தார். 

களக்காடு நாகன்குளம் விலக்கு அருகே சென்றபோது ஒரு ஆம்னி வேனில் நாங்குநேரியை சேர்ந்த கண்ணன், கள்ளிகுளத்தை சேர்ந்த ஸ்ரீமுருகன், சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துவேல், சோமசுந்தரம், குரலி வானுமாமலை, வேல் ஆறுமுகம், முருகன் ஆகிய 7 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று மொபட்டை வழிமறித்து, சுப்பிரமணியனிடம் மது குடிக்க ரூ.1,000 கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளை கழுத்தில் வைத்து மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.320-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி சுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை தாக்கி நகை,பணம் பறிப்பு
பெண்ணை தாக்கி நகை,பணம் பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு
நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு.
3. கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறிப்பு
கணவன்-மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
4. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
5. விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சம் பறிப்பு
விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.