மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + youngster hanged

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மோகனூர்:
மோகனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
கருத்து வேறுபாடு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆரியூர் ஊராட்சி நடுப்பட்டி காலனியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும், பரளி ஊராட்சி கடகால்புதூரை சேர்ந்த தமிழரசி (21) என்பவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான 2 மாதங்களிலேயே புதுமண தம்பதிகளின் இல்லற வாழ்வு கசந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக ெதரிகிறது.
இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு தமிழரசி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கோபிநாத் மன வேதனை அடைந்து சோகமாக இருந்து வந்தாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற கோபிநாத் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.
 விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கோபிநாத்தின் தாய் செந்தாமரை மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பில்ராஜ் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து வாலிபர் சாவு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை

அதிகம் வாசிக்கப்பட்டவை